சனி, 22 ஆகஸ்ட், 2015

"முயன்றால் தொட்டுவிடலாம்...!!!

வானத்தை எட்டி பிடிக்க முயன்றால்
மேகத்தை  தொட்டுவிடலாம்
ஆம்! தொட்டதால் தான்
வெயில் மழையின் முன் அறிவிப்பு!

சூரியனை எட்டி பிடிக்க முயன்றால்
சந்திரனை தொட்டுவிடலாம்
ஆம்! தொட்டதால் தான்
சந்திரனில் மனிதன் கால் தடம்!

லமரத்தை எட்டி பிடிக்க முயன்றால்
விழுதுகளை தொட்டுவிடலாம்
ஆம்! தொட்டதால் தான்
மரக்கிளையில் ஆடுகிறது ஊஞ்சல்!


காயத்தை எட்டி பிடிக்க முயன்றால்
பறவைகளைக் தொட்டுவிடலாம்
ஆம்! தொட்டதால் தான்
காற்றில் பயணிக்கிறது விமானம்!

நினைவை எட்டி பிடிக்க முயன்றால்
நிகழ்வுகளை  தொட்டுவிடலாம்
ஆம்! தொட்டதால் தான்
காட்சிகளை அள்ளித் தருகிறது தொலைகாட்சி!

காற்றை எட்டி பிடிக்க முயன்றால்
காற்றலைகளை  தொட்டுவிடலாம்
ஆம்! தொட்டதால் தான்
காதுகளுக்கு இனிமையான ஒலி தருகிறது வானொலி!

ட்டிப் பிடிக்கும் தூரத்தில் இல்லை வெற்றி! 
அதை விட்டுவிடும் எண்ணத்தில் இல்லை னின்!


- தமிழ்நேசன் த.நாகராஜ்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக