வெள்ளி, 4 செப்டம்பர், 2015

அம்மா! என்றும் நீ என்னவளே...


பத்து மாதம் சுமந்தவளே
பக்குவமாய் எனை காக்க
பத்தியம் பல இருந்தவளே

உதிரத்தை உணவாக்கி
உன்னுயிராய் எனை காத்தவளே
உலகத்தில் நான் கண்விழிக்க
உன் தூக்கம் மறந்தவளே

பார்த்துப் பார்த்து வளர்த்தவளே
பாரில் நானுயர உழைத்தவளே
பாசம் காட்டி எப்பொழுதும்
பகலிரவாய் எனை அணைத்தவளே

அன்பையும் பண்பையும் எனது அடையாளமாக்கி
ஆற்றலும் போற்றலும் என் நிலையாக்கி
அறிவும் ஒழுக்கமும் தந்தவளே
ஆதிசக்தியாய் துணை நின்றவளே

அன்றுனது முந்தானை வாசம்
என்றும் எனது நற்சிந்தனையாய் பேசும்..
அம்மா! என்றும் நீ என்னவளே


-தமிழ்நேசன் த.நாகராஜ்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக