புதன், 12 ஆகஸ்ட், 2015

நீயே தமிழ் தாயே...!!!

ன்னை நினைத்து
நான் கடக்க

சிலர் என்னையும்
நினைத்தார்
அந்த நினைப்பில் நீயே - தாயே

உன்னை  பற்றி பேச
நான் தகிக்க

பலர் என்னையும்
பற்றி பேசினார்
அந்த பேச்சு நீயே - தாயே

உன்னை சிறப்பு என்று
நான் துதிக்க

சிலர் என்னையும்
சிறப்பு என்றார்
அந்த சிறப்பு நீயே - தாயே

நீ தந்த வழி தடத்தில்
நான் நடக்க

எனது வாழ்க்கைத்
தடமேல்லாம் நீயே - தமிழ்த் தாயே

தமிழ்நேசன் த.நாகராஜ்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக